வருவார்கள் ஆதி தமிழர்கள்

தமிழ் செம்மொழி.கல்தோன்றி மண் தோன்றா காலத்தே முன் தோன்றிய மூத்தமொழி தமிழ் மொழி.தமிழ் தன் இமல்பால் பல கோடி தமிழர்களின் மனங்களை ஆட்சி செய்யும் மொழி.நான் கூறும் சிறப்புகள் கடலில் மொத்தம் கடுகளவே.இன்னும் ஆயிரம் ஆயிரம் சிறப்புகளைக் கொண்ட மொழியை கண்னெனக் கருதி வளர்த்தனர் ஆதி தமிழர்.இன்றுல்ல தலைமுறை தமிழை வளர்க்க வில்லையா? என்று கேட்டால் வளர்க்கவில்லை தான் என்பது உண்மை.இந்நாள் வரை நம் மொழிக்கு உள்ள சிறப்புகளை சேர்த்தது நம் ஆதி தமிழரே.நாம் நம் மொழியில் பேசவே வெட்கித்தலை குனிகிறோம் என்பதே மெய்.ஆதி தமிழனோ தமிழ் மொழியை தன் தாயாக,உயிராக,வாழ்வாக நினைத்தான்.மேலும்,இனி யாரும் நம் மொழி அழிந்துவிடமோ என்று பயப்பட தேவையில்லை.நாம் செய்ய வேண்டியது நம்மால் முடிந்தளவுக்கு தமிழை வளர்பதே.இழிநிலையை உண்டாக்காமல் இருப்பதும் அவசியம்.சரி,அப்போது யார்தான் எதிர்காலத்தில் தமிழை பார்த்துக்கொள்வார்கள்.உலகை ஆண்ட தமிழனுக்கு ,எவராலும் முடியாததை செய்த தமிழனுக்கு,கோள்களை தம் ஞானத்தால் அவதானிக்க முடிந்த தமிழனுக்கு,முக்காலத்தையும் உணர்ந்த தமிழனுக்கு எதிர்காலத்தில் அதாவது கி.பி 2017-ம் ஆண்டு தமிழ் மொழியின் நிலை எவ்வாராய் இருக்கும் என்று உணர்ந்திருக்க மாட்டார்களா?.அதை எப்படி மறுபடியும் உலகம் அனைத்தும் கொண்டு சேர்க்க வேண்டும் என்று தெரியாதா?.முக்காலத்தையும் மூவேந்தர்களையும் ஆட்டுவித்த தமிழ் தாய்க்கு எப்படி இந்த கலியுக மானிடர்களை ஆள வேண்டும் என்று தெரியாதா?.நம் மொழி காக்க இனம் காக்க வீரத்தை இவ்வுலகிற்கு பறைசாற்ற வருவான் என் பாண்டியன்,வருவான் என் சோழன்,வருவான் என் சேரன்.மொழியால் இவ்வுலகை ஆட்டுவிக்க வருவார்கள் என் ஆதி தமிழர்கள்.வரவேற்போம் நாம்.அதுவரை காத்திருந்து மொழியை பாதுகாப்போம் நாம்.